4 யெகோவா சொன்ன எல்லாவற்றையும் மோசே எழுதி வைத்தார்.+ பின்பு அவர் விடியற்காலையில் எழுந்து, அந்த மலையின் அடிவாரத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டினார். இஸ்ரவேலின் 12 கோத்திரங்களைக் குறிப்பதற்காக 12 கல்தூண்களையும் நாட்டினார்.
27 அதோடு யெகோவா மோசேயிடம், “இந்த வார்த்தைகளை நீ எழுதி வைத்துக்கொள்.+ ஏனென்றால், இந்த வார்த்தைகளின்படியே நான் உன்னோடும் இஸ்ரவேலர்களோடும் ஒப்பந்தம் செய்கிறேன்”+ என்றார்.