14 ஆபிராமிடமிருந்து லோத்து பிரிந்துபோன பின்பு யெகோவா ஆபிராமிடம், “நீ இருக்கும் இடத்திலிருந்து தயவுசெய்து வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் பார். 15 நீ பார்க்கும் எல்லா இடங்களையும் உனக்கும் உன் சந்ததிக்கும் நிரந்தர சொத்தாகத் தருவேன்.+
18 அன்றைக்கு ஆபிராமுடன் யெகோவா ஓர் ஒப்பந்தம் செய்து,+ “எகிப்தில் இருக்கிற ஆற்றிலிருந்து பெரிய ஆறான யூப்ரடிஸ்வரை*+ இருக்கிற இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுப்பேன்.+
3 இந்தத் தேசத்தில் அன்னியனாகத் தங்கியிரு.+ நான் எப்போதும் உன்னோடு இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன். உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசம் முழுவதையும் கொடுப்பேன்.+ உன் அப்பாவான ஆபிரகாமுக்குக் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுவேன்.+
4 ஆபிரகாமுக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தை+ அவர் உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பார். நீ அன்னியனாகக் குடியிருக்கிற இந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வாய். ஆபிரகாமுக்கு அவர் கொடுத்த இந்தத் தேசம்+ உனக்குச் சொந்தமாகும்” என்று சொல்லி ஆசீர்வதித்தார்.