-
உபாகமம் 30:19, 20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 இன்று பரலோகத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்துச் சொல்கிறேன், உங்கள் முன்னால் நான் வாழ்வையும் சாவையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்.+ நீங்களும் உங்கள் சந்ததிகளும்+ பிழைப்பதற்காக, 20 நீங்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் அன்பு காட்டி,+ அவருடைய பேச்சைக் கேட்டு நடந்து, அவருக்கு உண்மையாக* இருப்பதன் மூலம்+ வாழ்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.+ ஏனென்றால், யெகோவாதான் உங்களுக்கு வாழ்வு தருவார். உங்கள் முன்னோர்களான ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்தில்+ அவர்தான் உங்களை நீண்ட காலம் வாழ வைப்பார்” என்று சொன்னார்.
-
-
1 ராஜாக்கள் 18:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 பின்பு எலியா அங்கே கூடிவந்திருந்த மக்கள் எல்லாரையும் பார்த்து, “நீங்கள் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இரண்டு மனதாக இருப்பீர்கள்?*+ யெகோவாதான் உண்மையான கடவுள் என்றால் அவரை வணங்குங்கள்;*+ பாகால்தான் உண்மையான கடவுள் என்றால் அவனை வணங்குங்கள்!”* என்று சொன்னார். ஆனால், மக்கள் அவருக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள்.
-