24 ஆனால், அவனும் வில்லைக் கையில் தயாராக வைத்திருந்தான்.+ அவனுடைய கைகள் வலிமையுடனும் துடிப்புடனும் இருந்தன.+ இஸ்ரவேலின் மூலைக்கல்லாகவும் மேய்ப்பராகவும் யாக்கோபுக்கு வலிமைமிக்கவராகவும் இருந்தவர்தான்* அதற்குக் காரணம்.
32 இன்னும் யாரைப் பற்றிச் சொல்வேன்? கிதியோன்,+ பாராக்,+ சிம்சோன்,+ யெப்தா,+ தாவீது,+ சாமுவேல்+ என்பவர்களையும், மற்ற தீர்க்கதரிசிகளையும் பற்றிச் சொல்லிக்கொண்டே போனால் எனக்கு நேரம் போதாது.