21 அதன்பின், மனோவாவுக்கும் அவருடைய மனைவிக்கும் முன்னால் யெகோவாவின் தூதர் வரவில்லை. அவர் யெகோவாவின் தூதர் என்பதை மனோவா அப்போது புரிந்துகொண்டார்.+ 22 உடனே தன்னுடைய மனைவியிடம், “நாம் கடவுளையே பார்த்துவிட்டோம், அதனால் கண்டிப்பாகச் சாகப்போகிறோம்”+ என்று சொன்னார்.