22 அதனால், அவர் யெகோவாவின் தூதர் என்பதை கிதியோன் புரிந்துகொண்டார்.+
உடனே கிதியோன், “ஐயோ, யெகோவாவே! உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, நான் உங்களுடைய தூதரை நேருக்கு நேராகப் பார்த்துவிட்டேனே”+ என்று சொன்னார். 23 ஆனால் யெகோவா அவரிடம், “பயப்படாதே,+ நிம்மதியாக இரு. நீ சாக மாட்டாய்” என்று சொன்னார்.