3 அதன்பின் மோசே ஜனங்களிடம் போய், யெகோவா சொன்ன எல்லா விஷயங்களையும் அவர் கொடுத்த எல்லா நீதித்தீர்ப்புகளையும் சொன்னார்.+ அப்போது ஜனங்கள் எல்லாரும் ஒரே குரலில், “யெகோவா சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம்”+ என்றார்கள்.
8 அதனால் மோசே இரத்தத்தை எடுத்து ஜனங்கள்மேல் தெளித்து,+ “யெகோவா உங்களோடு செய்திருக்கிற ஒப்பந்தத்தின் வார்த்தைகளைக் கேட்டீர்களே, அந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் இரத்தம் இதுதான்”+ என்றார்.
27 அதோடு யெகோவா மோசேயிடம், “இந்த வார்த்தைகளை நீ எழுதி வைத்துக்கொள்.+ ஏனென்றால், இந்த வார்த்தைகளின்படியே நான் உன்னோடும் இஸ்ரவேலர்களோடும் ஒப்பந்தம் செய்கிறேன்”+ என்றார்.
29யெகோவா இஸ்ரவேலர்களுடன் ஓரேபில் செய்த ஒப்பந்தத்தைத்+ தவிர, மோவாப் தேசத்தில் இன்னொரு ஒப்பந்தத்தையும் செய்யும்படி மோசேயிடம் கட்டளை கொடுத்தார். அந்த ஒப்பந்தத்தின் வார்த்தைகள் இவைதான்.
16 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்த ஒப்பந்தத்தை மீறி மற்ற தெய்வங்களைக் கும்பிட்டால், யெகோவாவுக்கு உங்கள்மேல் பயங்கர கோபம் வரும்.+ அவர் தந்திருக்கிற இந்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாக அழிந்துபோவீர்கள்”+ என்று சொன்னார்.