36 இப்படி, லோத்துவின் இரண்டு மகள்களும் தங்கள் அப்பாவினால் கர்ப்பமானார்கள். 37 பெரியவளுக்கு ஒரு பையன் பிறந்தான். அவனுக்கு மோவாப்+ என்று அவள் பெயர் வைத்தாள். அவனுடைய வம்சத்தில் வந்தவர்களைத்தான் இன்று மோவாபியர்கள்+ என்று சொல்கிறோம்.
9 அப்போது யெகோவா என்னிடம், ‘மோவாப் தேசத்தாரோடு எந்த வம்புக்கும் போகாதீர்கள், அவர்களோடு போர் செய்யாதீர்கள். அவர்களுடைய தேசத்தில் எந்த இடத்தையும் நான் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன். ஏனென்றால், லோத்து வம்சத்தாருக்கு+ ஆர் நகரத்தைக் கொடுத்திருக்கிறேன்.