உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 25:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 உங்களுடைய சகோதரன் ஏழையாகி தன்னுடைய நிலத்தில் கொஞ்சத்தை விற்றுவிட்டால், அவனுடைய நெருங்கிய சொந்தக்காரன் வந்து அதை மீட்க வேண்டும்.+

  • உபாகமம் 25:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 கூடப்பிறந்த சகோதரர்கள் ஒரே இடத்தில் வாழும்போது அவர்களில் ஒருவன் ஆண் வாரிசு இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய மனைவி அந்தக் குடும்பத்துக்கு வெளியே கல்யாணம் செய்யக் கூடாது. அவளுடைய கணவனின் சகோதரன் அவளை மனைவியாக ஏற்றுக்கொண்டு, கொழுந்தனுடைய* கடமையைச் செய்ய வேண்டும்.+ 6 அவளுக்குப் பிறக்கிற மூத்த மகன், இறந்துபோன அவளுடைய கணவனின் மகனைப் போலக் கருதப்படுவான்.*+ அதனால், அவளுடைய கணவனின் பெயர் இஸ்ரவேலிலிருந்து மறைந்துபோகாது.+

  • ரூத் 3:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 உடனே அவர், “யார் நீ?” என்று கேட்டார். அதற்கு அவள், “நான் உங்களுடைய வேலைக்காரி ரூத். தயவுசெய்து என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்.* என்னை மீட்கும் உரிமையுள்ளவர்+ நீங்கள்தான்” என்று சொன்னாள்.

  • ரூத் 3:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 நான் உன்னை மீட்டுக்கொள்ளும் உரிமையுள்ளவன்தான்.+ ஆனால் அந்த உரிமை இன்னொருவனுக்கும் இருக்கிறது, அவன்தான் என்னைவிட உனக்கு நெருங்கிய சொந்தக்காரன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்