உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 8:11-18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அவர் அவர்களிடம், “உங்களை ஆட்சி செய்யும் ராஜாவுக்கு உங்களை எப்படி வேண்டுமானாலும் அடக்கி ஆள உரிமை இருக்கிறது:+ அவனுடைய ரத வீரர்களாகவும்+ குதிரை வீரர்களாகவும்+ அவன் உங்கள் மகன்களை வைத்துக்கொள்வான்.+ அவனுடைய ரதங்களுக்கு முன்னால் சிலரை ஓட வைப்பான். 12 1,000 பேருக்குத் தலைவர்களையும்,+ 50 பேருக்குத் தலைவர்களையும்+ நியமித்து அவர்களிடம் வேலை வாங்குவான். நிலத்தை உழுவதற்கும்,+ அறுவடை செய்வதற்கும்,+ போர் ஆயுதங்கள் தயாரிப்பதற்கும், ரதங்களுக்குத்+ தேவையான கருவிகள் செய்வதற்கும் உங்களை வைத்துக்கொள்வான். 13 உங்களுடைய மகள்களை வாசனைத் தைலம் செய்கிறவர்களாகவும் சமையல்காரிகளாகவும் ரொட்டி சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்வான்.+ 14 உங்களுடைய செழிப்பான வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவத் தோப்புகளையும் பிடுங்கி+ அவனுடைய ஊழியர்களுக்குக் கொடுப்பான். 15 உங்களுடைய வயல்களிலும் திராட்சைத் தோட்டங்களிலும் விளைகிறவற்றில் பத்திலொரு பாகத்தை எடுத்து அவனுடைய அரண்மனை அதிகாரிகளுக்கும் சேவகர்களுக்கும் கொடுப்பான். 16 உங்களுடைய வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் புஷ்டியான கால்நடைகளையும் கழுதைகளையும் கொண்டுபோய் அவனுடைய வேலைக்கு வைத்துக்கொள்வான்.+ 17 உங்களுடைய மந்தைகளில் பத்திலொரு பாகத்தை எடுத்துக்கொள்வான்.+ நீங்கள் அவனுக்கு அடிமைகளாக இருப்பீர்கள். 18 நீங்கள் தேர்ந்தெடுக்கிற ராஜா உங்களுக்குச் செய்வதையெல்லாம் பார்த்து+ ஒருநாள் யெகோவாவிடம் முறையிடுவீர்கள். ஆனால், அவர் உங்களுக்குப் பதில் சொல்ல மாட்டார்” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்