உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 17:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அதன்பின் கடவுள் ஆபிரகாமிடம், “நீயும் உன் வருங்காலச் சந்ததியும், அவர்களுக்குப் பின்வரும் எல்லா தலைமுறைகளும் என் ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். 10 நான் உங்களோடு செய்கிற ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம்* செய்துகொள்ள வேண்டும். நீயும் உன் வருங்காலச் சந்ததியும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.+

  • நியாயாதிபதிகள் 14:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 ஆனால் அவருடைய அம்மாவும் அப்பாவும், “நம்முடைய சொந்தத்திலும் ஜனத்திலும் உனக்குப் பெண் கிடைக்கவில்லையா?+ விருத்தசேதனம் செய்யாத பெலிஸ்திய ஜனங்களிடமிருந்துதான் நீ பெண்ணெடுக்க வேண்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு சிம்சோன் தன் அப்பாவிடம், “அவள்தான் எனக்குப் பொருத்தமானவள், அவளையே எனக்குக் கல்யாணம் செய்து வையுங்கள்” என்று சொன்னார்.

  • நியாயாதிபதிகள் 15:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அப்போது அவருக்கு ரொம்பத் தாகமாக இருந்தது. அவர் யெகோவாவிடம், “இந்த அடியேனுக்கு நீங்கள் மாபெரும் வெற்றியைக் கொடுத்தீர்களே. ஆனால், இப்போது நான் தாகத்தால் செத்துக்கொண்டிருக்கிறேன். விருத்தசேதனம் செய்யப்படாத இந்த ஆட்களின் கையில் என் உயிர்போக வேண்டுமா?” என்று கெஞ்சினார்.

  • 1 சாமுவேல் 17:36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 சிங்கம், கரடி இரண்டையுமே அடித்துக் கொன்றேன். விருத்தசேதனம் செய்யாத இந்தப் பெலிஸ்தியனுக்கும் அதே கதிதான் வரும்! உயிருள்ள கடவுளின் படையிடமே அவன் சவால்விட்டிருக்கிறானே!”+ என்றான்.

  • 1 நாளாகமம் 10:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அதனால் சவுல் தன்னுடைய ஆயுதங்களைச் சுமந்தவனிடம், “உன் வாளை உருவி என்னைக் குத்திப்போடு; இல்லாவிட்டால், விருத்தசேதனம் செய்யாத அந்த ஆட்கள் வந்து என்னைக் கொடூரமாக* கொன்றுவிடுவார்கள்”+ என்று சொன்னார். ஆனால், அவன் மிகவும் பயந்ததால் தன்னால் முடியாதென்று சொல்லிவிட்டான். அதனால், சவுல் தன்னுடைய வாளை எடுத்துத் தன் உயிரைப் போக்கிக்கொண்டார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்