21அதன்பின் தாவீது, நோபு நகரத்தில் இருக்கிற குருவாகிய அகிமெலேக்கிடம் போனார்.+ அவரைப் பார்த்ததும் அகிமெலேக்கு பதற்றத்தோடு அவரிடம் வந்து, “தனியாக வந்திருக்கிறீர்களே, வேறு யாரும் உங்களோடு வரவில்லையா?”+ என்று கேட்டார்.
7 அன்றைக்கு சவுலின் ஊழியர்களில் ஒருவன் ஏதோவொரு கட்டாயத்தினால் அங்கே யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்தில் இருந்தான். அவன் பெயர் தோவேக்.+ அவன் ஓர் ஏதோமியன்,+ சவுலின் மேய்ப்பர்களுக்குத் தலைவன்.