17 செய்தி கொண்டுவந்த அந்த ஆள் அவரிடம், “இஸ்ரவேலர்கள் படுதோல்வி அடைந்துவிட்டார்கள்.+ பெலிஸ்திய வீரர்களிடமிருந்து பயந்து ஓடிவிட்டார்கள். உங்களுடைய இரண்டு மகன்கள் ஓப்னியும் பினெகாசும் இறந்துவிட்டார்கள்.+ அதுமட்டுமல்ல, உண்மைக் கடவுளின் பெட்டியை எதிரிகள் கைப்பற்றிவிட்டார்கள்”+ என்று சொன்னான்.