8 தாவீதுடன் இருந்த மாவீரர்களின் பெயர்கள்:+ தக்கெமோனியனான யோசேப்-பாசெபெத், அவர் மூன்று மாவீரர்களில் ஒருவர்;+ அவர்தான் அந்த மாவீரர்களுக்குத் தலைவர். ஒரு சமயம், அவர் தன்னுடைய ஈட்டியால் 800 பேரைக் கொன்றுபோட்டார்.
5 ஏனென்றால், யெகோவாவுக்குப் பிடித்த காரியங்களையே தாவீது செய்திருந்தார். அவருடைய வாழ்நாள் முழுவதும் கடவுளுடைய கட்டளைகள் எதையுமே மீறவில்லை; ஏத்தியனான உரியா விஷயத்தில் மட்டும்தான் தவறு செய்திருந்தார்.+