9 என் இதயம் ஒரு பெண்ணிடம் மயங்கியிருந்தால்,+
அவளுக்காக நான் அடுத்தவனின் வாசலில் காத்துக் கிடந்திருந்தால்,+
10 என் மனைவி இன்னொருவனுக்கு மனைவியாகட்டும்.
மற்ற ஆண்கள் அவளோடு படுக்கட்டும்.+
11 நான் ஒழுக்கக்கேடாக நடந்திருந்தால் அது படுகேவலமாக இருந்திருக்கும்.
அந்தக் குற்றத்துக்காக நீதிபதிகள் என்னைத் தண்டிப்பதே நியாயமாக இருந்திருக்கும்.+