6 அதனால் தாவீது அபிசாயைப்+ பார்த்து, “அப்சலோமைவிட பிக்கிரியின் மகன் சேபா+ ரொம்ப ஆபத்தானவன்.+ அதனால், என்னுடைய ஊழியர்களைக் கூட்டிக்கொண்டு அவனைத் துரத்திக்கொண்டு போ. இல்லாவிட்டால், அவன் ஏதாவது மதில் சூழ்ந்த நகரத்துக்குள் போய் ஒளிந்துகொண்டு நம்மிடமிருந்து தப்பித்துவிடுவான்” என்று சொன்னார்.