26 இதெல்லாம் நடப்பதற்குள் ஏகூத் தப்பித்து ஓடிவிட்டார். சிலைகளை கடந்து+ சேயிரா என்ற இடத்துக்குப் பத்திரமாகப் போய்ச் சேர்ந்தார். 27 அங்கு போய்ச் சேர்ந்ததும், அந்த எப்பிராயீம் மலைப்பகுதியில்+ ஊதுகொம்பை ஊதினார்.+ இஸ்ரவேலர்கள் அவருடைய தலைமையில் அந்த மலைப்பகுதியிலிருந்து இறங்கிவந்தார்கள்.