8 தாவீதுடன் இருந்த மாவீரர்களின் பெயர்கள்:+ தக்கெமோனியனான யோசேப்-பாசெபெத், அவர் மூன்று மாவீரர்களில் ஒருவர்;+ அவர்தான் அந்த மாவீரர்களுக்குத் தலைவர். ஒரு சமயம், அவர் தன்னுடைய ஈட்டியால் 800 பேரைக் கொன்றுபோட்டார்.
10 தாவீதுடன் இருந்த மாவீரர்களின் தலைவர்களைப் பற்றிய தகவல் இது; தாவீது ராஜாவாக ஆவதற்கு மற்ற இஸ்ரவேலர்கள் எல்லாரோடும் சேர்ந்து இவர்கள் ஆதரவு தந்தார்கள். இஸ்ரவேலர்களுக்கு யெகோவா வாக்குறுதி கொடுத்தபடியே அவரை ராஜாவாக்கினார்கள்.+