-
2 நாளாகமம் 1:3-6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 பின்பு, சாலொமோனும் சபையார் எல்லாரும் கிபியோனில் இருந்த ஆராதனை மேட்டுக்குப் போனார்கள்.+ யெகோவாவின் ஊழியரான மோசே வனாந்தரத்தில் இருந்தபோது செய்த உண்மைக் கடவுளின் சந்திப்புக் கூடாரம் அங்கேதான் இருந்தது. 4 ஆனால் தாவீது, உண்மைக் கடவுளின் பெட்டியை கீரியாத்-யெயாரீமிலிருந்து+ எருசலேமில் தான் தயார் செய்திருந்த இடத்துக்குக் கொண்டுவந்திருந்தார். அதற்கென்று தான் போட்டிருந்த கூடாரத்தில் அதை வைத்திருந்தார்.+ 5 ஹூரின் பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேல்+ செய்திருந்த செம்புப் பலிபீடம்+ யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்துக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்தது. சாலொமோனும் சபையாரும் அந்தக் கூடாரத்துக்கு முன்னால் வேண்டிக்கொள்வது* வழக்கம். 6 சந்திப்புக் கூடாரத்துக்கு முன்னால் இருந்த செம்புப் பலிபீடத்தில், யெகோவாவுக்குமுன் 1,000 தகன பலிகளை சாலொமோன் செலுத்தினார்.+
-