-
உபாகமம் 17:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற ராஜாவை மட்டும்தான் நீங்கள் நியமிக்க வேண்டும்.+ உங்கள் சகோதரர்களில் ஒருவரைத்தான் ராஜாவாக்க வேண்டும். வேறு தேசத்தைச் சேர்ந்தவனை ராஜாவாக்கக் கூடாது. 16 ராஜா தனக்காக ஏராளமான குதிரைகளை வைத்துக்கொள்ளக் கூடாது,+ அல்லது இன்னும் அதிக குதிரைகளை வாங்குவதற்காக ஜனங்களை எகிப்துக்கு அனுப்பக் கூடாது.+ ஏனென்றால், ‘இனி ஒருபோதும் நீங்கள் அந்தப் பக்கம் போகக் கூடாது’ என்று யெகோவா சொல்லியிருக்கிறார்.
-
-
1 ராஜாக்கள் 10:24-26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 சாலொமோனைச் சந்தித்து, கடவுள் தந்த ஞானத்தால்+ அவர் பேசிய வார்த்தைகளைக் கேட்க உலகத்திலிருந்த எல்லா தேசத்து மக்களும் ஆசைப்பட்டார்கள். 25 அவரைச் சந்திக்க வந்த ஒவ்வொருவரும் தங்கப் பொருள்கள், வெள்ளிப் பொருள்கள், உடைகள், ஆயுதங்கள், பரிமளத் தைலம், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை அன்பளிப்பாகக் கொண்டுவந்தார்கள். வருஷா வருஷம் இப்படிச் செய்துவந்தார்கள்.
26 ரதங்களையும் குதிரைகளையும்* சாலொமோன் ஏராளமாகச் சேர்த்துக்கொண்டே இருந்தார். அவரிடம் 1,400 ரதங்களும் 12,000 குதிரைகளும்* இருந்தன.+ ரதங்களுக்கான நகரங்களிலும் எருசலேமில் ராஜா குடியிருந்த இடத்துக்குப் பக்கத்திலும் அவற்றை நிறுத்தி வைத்தார்.+
-
-
2 நாளாகமம் 1:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ரதத்தின் விலை 600 வெள்ளிக் காசுகள், ஒரு குதிரையின் விலை 150 வெள்ளிக் காசுகள். பின்பு, இவற்றை சீரியாவின் ராஜாக்கள் எல்லாருக்கும், ஏத்திய ராஜாக்கள் எல்லாருக்கும் ஏற்றுமதி செய்வார்கள்.
-