10பின்பு சாமுவேல், குடுவையைத் திறந்து சவுலின் தலையில் எண்ணெய் ஊற்றினார்.+ அதன்பின், அவருக்கு முத்தம் கொடுத்துவிட்டு, “யெகோவா உன்னைத் தன்னுடைய சொத்தாகிய ஜனங்களுக்குத்+ தலைவனாக அபிஷேகம் செய்திருக்கிறார்.+
24 அப்போது சாமுவேல் ஜனங்களிடம், “இதோ, பாருங்கள்! யெகோவா தேர்ந்தெடுத்த ராஜா!+ இவரைப் போல வேறு யாருமே இல்லை” என்று சொன்னார். அப்போது ஜனங்கள் எல்லாரும், “ராஜா நீடூழி வாழ்க!” என்று கோஷம் போட்டார்கள்.
10 அப்சலோம் இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களுக்கும் உளவாளிகளை அனுப்பினான். “ஊதுகொம்பின் சத்தத்தைக் கேட்டதும் ‘அப்சலோம் எப்ரோனில்+ ராஜாவாகிவிட்டார்!’ என்று முழங்குங்கள்” என அவர்களிடம் சொல்லியிருந்தான்.
12 பின்பு ராஜாவின் மகனை+ யோய்தா வெளியே கூட்டிக்கொண்டு வந்து, அவனுடைய தலையில் கிரீடத்தையும்* திருச்சட்ட சுருளையும்+ வைத்தார். அப்போது அவர்கள் அவனை அபிஷேகம் செய்து, ராஜாவாக்கினார்கள். அதோடு, கைதட்டி, “ராஜா பல்லாண்டு வாழ்க!”+ என்று ஆரவாரம் செய்தார்கள்.