9 நீங்கள் பூமியை அக்கறையோடு கவனித்துக்கொள்கிறீர்கள்.
அதைச் செழிப்பாக்குகிறீர்கள், அமோகமாக விளைய வைக்கிறீர்கள்.+
உங்கள் ஓடையைப் பெருக்கெடுத்து ஓட வைக்கிறீர்கள்.
மக்களுக்குத் தானியத்தைத் தருகிறீர்கள்.+
இந்த விதத்தில்தான் பூமியைப் படைத்திருக்கிறீர்கள்.
10 வயல்களின் சால்களில் தண்ணீரை நிரப்பி, அவற்றின் வரப்புகளை சமப்படுத்துகிறீர்கள்.
மழையைப் பொழிந்து மண்ணை மிருதுவாக்கி, அதன் விளைச்சலை ஆசீர்வதிக்கிறீர்கள்.+