உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 9:1-3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 தீர்க்கதரிசிகளுடைய மகன்களில் ஒருவரை எலிசா தீர்க்கதரிசி கூப்பிட்டு, “உன்னுடைய உடையை இடுப்பில் இழுத்துக் கட்டிக்கொள், இந்த எண்ணெய்க் குப்பியை எடுத்துக்கொண்டு சீக்கிரமாக ராமோத்-கீலேயாத்துக்குப் போ.+ 2 அங்கே போனதும், நிம்சியின் பேரனும் யோசபாத்தின் மகனுமான யெகூ+ எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடி. உள்ளே போய் அவருடைய சகோதரர்கள் நடுவிலிருந்து அவரைக் கூட்டிக்கொண்டு உள்ளறைக்குப் போ. 3 பின்பு, குப்பியில் இருக்கிற எண்ணெயை அவர் தலையில் ஊற்றி, ‘“உன்னை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்கிறேன்” என்று யெகோவா சொல்கிறார்’+ என்று சொல். பின்பு, கதவைத் திறந்து வேகமாக ஓடிவந்துவிடு” என்று சொன்னார்.

  • 2 ராஜாக்கள் 9:30-33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 யெகூ யெஸ்ரயேலுக்கு+ வந்ததை யேசபேல்+ கேள்விப்பட்டாள். உடனே தன் கண்களில் மை தீட்டி, தலையை அலங்கரித்துக்கொண்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். 31 வாசலில் யெகூ நுழைந்தபோது, “தன்னுடைய எஜமானைக் கொன்றுபோட்ட சிம்ரிக்கு வந்த கதி தெரியும்தானே?”+ என்று கேட்டாள். 32 அவர் அண்ணாந்து ஜன்னலைப் பார்த்து, “யார் என் பக்கம் இருக்கிறீர்கள்? யார்?”+ என்று கேட்டார். உடனே அரண்மனை அதிகாரிகள் இரண்டு மூன்று பேர் எட்டிப் பார்த்தார்கள். 33 அப்போது அவர், “அவளைக் கீழே தள்ளுங்கள்!” என்று சொன்னார். அவர்கள் உடனே அவளைக் கீழே தள்ளினார்கள். அவளுடைய இரத்தம் சுவர்மீதும் குதிரைகள்மீதும் தெறித்தது; அவருடைய குதிரைகள் அவளை மிதித்துப்போட்டன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்