-
1 ராஜாக்கள் 15:25-29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 ஆசா ராஜா யூதாவை ஆட்சி செய்த இரண்டாம் வருஷத்தில் யெரொபெயாமின் மகன் நாதாப்+ இஸ்ரவேலின் ராஜாவானார்; அவர் இரண்டு வருஷங்கள் ஆட்சி செய்தார். 26 யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துவந்தார். தன்னுடைய அப்பாவைப் போலவே கெட்ட வழியில் நடந்தார்,+ அவரைப் போலவே இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டினார்.+ 27 இசக்கார் கோத்திரத்தைச் சேர்ந்த அகியாவின் மகனான பாஷா இவருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டினார். நாதாபும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் பெலிஸ்தியர்களுக்குச் சொந்தமான கிபெத்தோனைச்+ சுற்றிவளைத்தபோது, அங்கே பாஷா அவரைக் கொன்றுபோட்டார். 28 இப்படி, யூதாவை ஆட்சி செய்த ஆசா ராஜாவின் மூன்றாம் வருஷத்தில் நாதாபைக் கொன்றுவிட்டு அவருக்குப் பதிலாக பாஷா ராஜாவானார். 29 அவர் ராஜாவாக ஆனவுடன், யெரொபெயாமின் வீட்டார் எல்லாரையும் கொன்றுபோட்டார். யெரொபெயாமின் வீட்டாரில் ஒருவரைக்கூட உயிரோடு விட்டுவைக்கவில்லை. சீலோவைச் சேர்ந்த அகியா என்ற தன்னுடைய ஊழியர் மூலம் யெகோவா சொன்ன வார்த்தையின்படியே, பாஷா அவர்களை அடியோடு அழித்துப்போட்டார்.+
-