-
உபாகமம் 28:53-57பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
53 அப்போது நிலைமை படுமோசமாக இருக்கும். எதிரிகள் உங்களை வாட்டி வதைப்பார்கள். பெற்றெடுத்த பிள்ளைகளையே நீங்கள் சாப்பிடுவீர்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா தந்த மகன்களின் சதையையும் மகள்களின் சதையையும் தின்பீர்கள்.+
54 இளகிய மனதுள்ளவனும் சொகுசாக வாழ்ந்தவனும்கூட தன் மகன்களுடைய சதையைத் தின்னும்போது, அண்ணன் தம்பிக்கோ ஆசை மனைவிக்கோ உயிரோடு இருக்கிற மகன்களுக்கோ அதைக் கொடுக்க மாட்டான். அவர்களுக்கு இரக்கம் காட்ட மாட்டான். 55 ஏனென்றால், சாப்பிட அவனிடம் வேறு எதுவும் இருக்காது. எதிரிகள் உங்கள் நகரங்களைச் சுற்றிவளைத்து, உங்களை அந்தளவுக்கு வாட்டி வதைப்பார்கள்.+ 56 இளகிய மனதுள்ளவளும் கால் தரையில் படாத அளவுக்கு சொகுசாக வாழ்ந்தவளும்கூட,+ ஆசை கணவனுக்கோ மகனுக்கோ மகளுக்கோ இரக்கம் காட்ட மாட்டாள். 57 தான் பெற்றெடுக்கிற பிள்ளையையும் பிரசவத்தின்போது வெளியேறுகிற எதையும் அவர்களுக்குக் கொடுக்க மாட்டாள். அவள் மட்டும் ரகசியமாகத் தின்றுதீர்ப்பாள். ஏனென்றால், எதிரிகள் உங்கள் நகரங்களைச் சுற்றிவளைத்து, உங்களை அந்தளவுக்கு வாட்டி வதைப்பார்கள்.
-