-
உபாகமம் 3:13-16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 கீலேயாத்தின் இன்னொரு பாதியையும் ஓகின் ராஜ்யத்தைச் சேர்ந்த பாசான் பகுதி முழுவதையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்குக் கொடுத்தேன்.+ பாசானைச் சேர்ந்த அர்கோப் பிரதேசம் முழுவதும் ரெப்பாயீமியர்களின் தேசம் என்று அழைக்கப்பட்டது.
14 கேசூரியர்கள் மற்றும் மாகாத்தியர்களின்+ எல்லைவரை இருந்த அர்கோப் பிரதேசம்+ முழுவதையும் மனாசேயின் மகனாகிய யாவீர்+ கைப்பற்றினார். பாசானிலிருந்த அந்தக் கிராமங்களுக்குத் தன்னுடைய பெயரையே வைத்து, அவோத்-யாவீர்*+ என்று அழைத்தார். இந்தப் பெயரில்தான் இன்றுவரை அவை அழைக்கப்படுகின்றன. 15 கீலேயாத்தை நான் மாகீருக்குக் கொடுத்தேன்.+ 16 கீலேயாத்முதல் அர்னோன் பள்ளத்தாக்குவரை நான் ரூபன் கோத்திரத்தாருக்கும் காத் கோத்திரத்தாருக்கும் கொடுத்தேன்.+ அந்தப் பள்ளத்தாக்கின் நடுப்பகுதிதான் அதன் எல்லை. அதோடு, அம்மோனியர்களின் எல்லையாகிய யாபோக் பள்ளத்தாக்கு வரையும்,
-
-
உபாகமம் 28:63பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
63 உங்களை ஏராளமாகப் பெருக வைப்பதிலும் சீரும் சிறப்புமாக வாழ வைப்பதிலும் ஒருசமயம் சந்தோஷப்பட்ட யெகோவா, இப்போது உங்களை அழிப்பதிலும் ஒழிப்பதிலும் சந்தோஷப்படுவார். நீங்கள் சொந்தமாக்கப்போகும் தேசத்திலிருந்து யெகோவா உங்களை வேரோடு பிடுங்கி எறிவார்.
-
-
யோசுவா 13:8-12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 மனாசேயின் மற்றொரு பாதிக் கோத்திரத்தாரும் ரூபன் கோத்திரத்தாரும் காத் கோத்திரத்தாரும் யோர்தானுக்குக் கிழக்கில், யெகோவாவின் ஊழியராகிய மோசே கொடுத்த பகுதிகளைச் சொத்தாகப் பெற்றுக்கொண்டார்கள்.+ 9 அர்னோன் பள்ளத்தாக்கின்*+ ஓரத்திலுள்ள ஆரோவேரையும்,+ அந்தப் பள்ளத்தாக்கின் நடுவிலுள்ள நகரத்தையும், தீபோன் வரையுள்ள மேதேபா பீடபூமி முழுவதையும், 10 எஸ்போனிலிருந்து ஆட்சி செய்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனின் நகரங்களையும், அதாவது அம்மோனியர்களின் எல்லை வரையுள்ள நகரங்களையும், பெற்றுக்கொண்டார்கள்.+ 11 அதோடு கீலேயாத்தையும், கேசூரியர்கள் மற்றும் மாகாத்தியர்களின் பகுதிகளையும்,+ எர்மோன் மலை முழுவதையும், சல்கா+ வரையுள்ள பாசான் முழுவதையும்,+ 12 அஸ்தரோத்திலிருந்தும் எத்ரேயிலிருந்தும் ஆட்சி செய்த பாசானின் ராஜாவாகிய ஓகின் ராஜ்யம் முழுவதையும் பெற்றுக்கொண்டார்கள். (ரெப்பாயீமியர்களில் கடைசியாக இருந்தது அவன் மட்டும்தான்.)+ மோசே அவர்களைத் தோற்கடித்து அங்கிருந்து துரத்தியிருந்தார்.+
-