-
2 நாளாகமம் 23:12-15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 மக்கள் ஓடுகிற சத்தத்தையும் ராஜாவைப் புகழ்கிற சத்தத்தையும் அத்தாலியாள் கேட்டவுடனே, யெகோவாவின் ஆலயத்தில் அவர்கள் கூடியிருந்த இடத்துக்கு வந்தாள்.+ 13 வாசலில் இருந்த தூண்* பக்கத்தில் ராஜா நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தாள். தலைவர்களும்+ எக்காளம் ஊதுகிறவர்களும் ராஜாவோடு இருந்தார்கள். மக்கள் எல்லாரும் சந்தோஷமாக இருந்தார்கள்,+ எக்காளங்களை ஊதிக்கொண்டிருந்தார்கள். இசைக் கருவிகளை வைத்திருந்த பாடகர்கள் அந்தக் கொண்டாட்டத்தை முன்நின்று நடத்தினார்கள். அதைப் பார்த்ததும் அத்தாலியாள் தன் உடையைக் கிழித்துக்கொண்டு, “சதி! சதி!” என்று கூச்சல் போட்டாள். 14 அப்போது நூறு வீரர்களுக்குத் தலைவர்களை, அதாவது படைக்குத் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களை, குருவாகிய யோய்தா வெளியே கூப்பிட்டு, “அவளை வீரர்கள் நடுவிலிருந்து வெளியே கொண்டுபோங்கள். எவனாவது அவள் பின்னால் போனால் அவனையும் வாளால் வெட்டிக் கொல்லுங்கள்!” என்று கட்டளையிட்டார். ஏனென்றால், “அவளை யெகோவாவின் ஆலயத்தில் கொல்ல வேண்டாம்” என்று அவர் சொல்லியிருந்தார். 15 அதனால் அவர்கள் அத்தாலியாளைப் பிடித்து, அரண்மனையிலிருந்த ‘குதிரை நுழைவாசலுக்கு’ கொண்டுபோய் உடனடியாகக் கொன்றுபோட்டார்கள்.
-