-
1 ராஜாக்கள் 16:30, 31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 உம்ரியின் மகனான ஆகாப் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துவந்தார். அவருக்கு முன்பிருந்த ராஜாக்கள் எல்லாரையும்விட படுமோசமானவராக இருந்தார்.+ 31 நேபாத்தின் மகனான யெரொபெயாம் செய்த பாவங்களை+ இவரும் செய்தார். இது போதாதென்று, சீதோனியர்களின்+ ராஜாவாகிய ஏத்பாகாலின் மகளான யேசபேலைக்+ கல்யாணம் செய்தார், பாகாலுக்கு முன்னால் தலைவணங்கி, அதற்குச் சேவை செய்ய ஆரம்பித்தார்.+
-
-
2 ராஜாக்கள் 23:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 பின்பு பாகாலுக்காக, பூஜைக் கம்பத்துக்காக,* வானத்துப் படைகளுக்காகச் செய்யப்பட்ட எல்லா சாமான்களையும் யெகோவாவின் ஆலயத்திலிருந்து வெளியே கொண்டுவரச் சொல்லி,+ தலைமைக் குரு இல்க்கியாவுக்கும்+ மற்ற குருமார்களுக்கும் காவலாளிகளுக்கும் ராஜா கட்டளையிட்டார். பின்பு, எருசலேமுக்கு வெளியே உள்ள கீதரோன் மலைச் சரிவுகளில் அவற்றை எரித்து, சாம்பலை பெத்தேலுக்குக் கொண்டுபோனார்.+ 5 யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் சுற்றுவட்டாரங்களிலும் இருந்த ஆராதனை மேடுகளில் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்வதற்காக யூதாவின் ராஜாக்கள் நியமித்திருந்த பொய் தெய்வ பூசாரிகளை நீக்கினார்; பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் ராசி மண்டலத்திலுள்ள நட்சத்திரங்களுக்கும் வானத்துப் படைகளுக்கும் பலியிட்டு புகை எழும்பிவரச் செய்கிறவர்களையும் நீக்கினார்.+
-