உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 36:13-20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 பின்பு ரப்சாக்கே நின்றுகொண்டு, யூதர்களுடைய மொழியில் சத்தமாக,+ “மன்னாதி மன்னரான அசீரிய ராஜா சொல்லி அனுப்பிய செய்தியைக் கேளுங்கள்.+ 14 ராஜாவின் செய்தி இதுதான்: ‘எசேக்கியாவின் பேச்சைக் கேட்டு ஏமாந்துவிடாதீர்கள். அவனால் உங்களைக் காப்பாற்ற முடியாது.+ 15 யெகோவாவை நம்பும்படி+ எசேக்கியா உங்களிடம் சொல்வான். “யெகோவா நிச்சயம் நம்மைக் காப்பாற்றுவார், இந்த நகரத்தை அசீரிய ராஜாவின் கையில் கொடுக்க மாட்டார்” என்று சொல்வான். அதையெல்லாம் நம்பாதீர்கள். 16 எசேக்கியாவின் பேச்சைக் கேட்காதீர்கள். அசீரிய ராஜா இப்படிச் சொல்கிறார்: “என்னோடு சமாதானம் பண்ணிக்கொண்டு, சரணடைந்து விடுங்கள். அப்போது நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் திராட்சைக் கொடியிலிருந்தே பழங்களைச் சாப்பிடுவீர்கள், உங்கள் அத்தி மரத்திலிருந்தே பழங்களைச் சாப்பிடுவீர்கள், உங்கள் தண்ணீர்த் தொட்டியிலிருந்தே தண்ணீரைக் குடிப்பீர்கள். 17 பின்பு நான் வந்து, உங்கள் தேசத்தைப் போலவே செழிப்பாக இருக்கும் தேசத்துக்கு உங்களைக் கூட்டிக்கொண்டு போவேன்.+ அது, தானியமும் புதிய திராட்சமதுவும் ரொட்டியும் ஏராளமாகக் கிடைக்கிற தேசம். திராட்சைத் தோட்டங்கள் நிறைந்த தேசம். 18 ‘யெகோவா நம்மைக் காப்பாற்றுவார்’ என்று எசேக்கியா சொல்வதை நம்பி ஏமாந்துபோகாதீர்கள். எந்தத் தெய்வமாவது அசீரிய ராஜாவின் பிடியிலிருந்து தன்னுடைய நகரத்தைக் காப்பாற்றியிருக்கிறதா?+ 19 காமாத்திலும் அர்பாத்திலும்+ உள்ள தெய்வங்களால் என்ன செய்ய முடிந்தது? செப்பர்வாயிமில்+ உள்ள தெய்வங்களாலும் என்ன செய்ய முடிந்தது? அவற்றால் சமாரியாவை என்னிடமிருந்து காப்பாற்ற முடிந்ததா?+ 20 இதுவரைக்கும் எந்தத் தெய்வத்தால் தன்னுடைய நகரத்தை என் கையிலிருந்து காப்பாற்ற முடிந்திருக்கிறது? அப்படியிருக்கும்போது, யெகோவா மட்டும் எப்படி எருசலேமை என்னிடமிருந்து காப்பாற்றுவார்?”’”+ என்று கேட்டான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்