-
2 சாமுவேல் 23:13-17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அறுவடை சமயத்தில் 30 தலைவர்களில் மூன்று பேர் அதுல்லாம் குகையிலிருந்த தாவீதிடம் போனார்கள்.+ பெலிஸ்தியர்களின் படையோ ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாம்போட்டிருந்தது.+ 14 அப்போது, தாவீது பாதுகாப்பான ஓர் இடத்தில் இருந்தார்.+ பெலிஸ்தியர்களின் புறக்காவல் படை ஒன்று பெத்லகேமில் இருந்தது. 15 அப்போது தாவீது, “பெத்லகேம் நுழைவாசலில் இருக்கும் தண்ணீர்த் தொட்டியிலிருந்து தண்ணீரைக் குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று ஏக்கத்தோடு சொன்னார். 16 உடனே அந்த மூன்று மாவீரர்களும் பெலிஸ்தியர்களோடு சண்டை போட்டுக்கொண்டே அவர்களுடைய முகாமுக்குள் நுழைந்து பெத்லகேம் நுழைவாசலில் இருக்கும் தண்ணீர்த் தொட்டியிலிருந்து தண்ணீர் கொண்டுவந்தார்கள். ஆனால் தாவீது அதைக் குடிக்க மறுத்து, யெகோவாவுக்காகக் கீழே ஊற்றிவிட்டார்.+ 17 அப்போது தாவீது, “யெகோவாவே, இப்படிச் செய்வதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது! எனக்காக உயிரையே பணயம் வைத்துப் போன என் வீரர்களின் இரத்தத்தை நான் குடிக்க வேண்டுமா?”+ என்றார். இப்படி, அந்தத் தண்ணீரைக் குடிக்க மறுத்துவிட்டார். இவையே அந்த மூன்று மாவீரர்கள் செய்த செயல்கள்.
-