உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 15:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 யூதா கோத்திரத்துக்கு அவரவர் குடும்பத்தின்படி ஒதுக்கப்பட்ட* பகுதி+ ஏதோமின்+ எல்லை வரைக்கும், அதாவது சீன் வனாந்தரம் வரைக்கும் நெகேபின் தென்முனை வரைக்கும், விரிந்திருந்தது.

  • யோசுவா 15:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அங்கிருந்து பென்-இன்னோம்* பள்ளத்தாக்குவரை,+ தெற்கே உள்ள எபூசியர்களின்+ மலைச் சரிவுவரை, அதாவது எருசலேம்வரை,+ அந்த எல்லை போனது. பின்பு, அது இன்னோம் பள்ளத்தாக்கின் மேற்கே இருக்கிற மலையின் உச்சிவரை போனது. அந்த மலை, ரெப்பாயீம் பள்ளத்தாக்கின் வடமுனையில் இருக்கிறது.

  • 2 சாமுவேல் 5:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 பின்பு, பெலிஸ்தியர்கள் மறுபடியும் திரண்டு வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கில்+ பரவினார்கள்.

  • 1 நாளாகமம் 11:15-19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 கற்பாறையிலிருந்த, அதாவது அதுல்லாம் குகையிலிருந்த,+ தாவீதிடம் 30 தலைவர்களில் மூன்று பேர் போனார்கள். அந்தச் சமயத்தில், பெலிஸ்தியர்களின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கில்+ முகாம்போட்டிருந்தது. 16 அப்போது, தாவீது பாதுகாப்பான ஓர் இடத்தில் இருந்தார். பெலிஸ்தியர்களின் காவல்படை ஒன்று பெத்லகேமில் இருந்தது. 17 அப்போது தாவீது, “பெத்லகேம்+ நுழைவாசலில் இருக்கும் தண்ணீர்த் தொட்டியிலிருந்து தண்ணீரைக் குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று ஏக்கத்தோடு சொன்னார். 18 உடனே அந்த மூன்று பேரும் பெலிஸ்தியர்களோடு சண்டை போட்டுக்கொண்டே அவர்களுடைய முகாமுக்குள் நுழைந்து, பெத்லகேம் நுழைவாசலில் இருக்கும் தண்ணீர்த் தொட்டியிலிருந்து தண்ணீர் கொண்டுவந்தார்கள். ஆனால் தாவீது அதைக் குடிக்க மறுத்து, யெகோவாவுக்காகக் கீழே ஊற்றிவிட்டார். 19 அப்போது அவர், “நான் கடவுளுக்குப் பயந்து நடப்பவன். அதனால், இப்படிச் செய்வதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது! எனக்காக உயிரையே பணயம் வைத்த என் வீரர்களின் இரத்தத்தை நான் குடிக்க வேண்டுமா? இவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து இதைக் கொண்டுவந்திருக்கிறார்களே!”+ என்று சொன்னார். இப்படி, அந்தத் தண்ணீரைக் குடிக்க மறுத்துவிட்டார். இவையே அந்த மூன்று மாவீரர்கள் செய்த செயல்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்