13 இஸ்மவேலுடைய மகன்களின் பெயர்களும் அவரவர் வம்சங்களின் பெயர்களும் இவைதான்: இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்.+ அவனுக்குப் பிறகு கேதார்,+ அத்பியேல், மிப்சாம்,+ 14 மிஷ்மா, தூமா, மாஸா, 15 ஆதாத், தீமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா ஆகிய மகன்களும் இஸ்மவேலுக்குப் பிறந்தார்கள்.