-
2 சாமுவேல் 7:4-7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 அன்று ராத்திரியே நாத்தானிடம் யெகோவா பேசினார். 5 “என் ஊழியன் தாவீதிடம் நீ போய், ‘யெகோவா சொல்வது என்னவென்றால்: “நான் குடியிருக்க ஒரு ஆலயத்தை நீ கட்டப்போகிறாயா?+ 6 இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டுவந்த நாள்முதல் இந்த நாள்வரை நான் ஒரு ஆலயத்தில் குடியிருக்கவில்லையே.+ இடம்விட்டு இடம் மாற்றப்பட்ட கூடாரத்தில்தானே குடியிருந்தேன்?*+ 7 இவ்வளவு காலமாக இஸ்ரவேலர்களோடு இருந்தும், அவர்களை வழிநடத்துவதற்கு நான் நியமித்த கோத்திரத் தலைவர்கள் யாரிடமாவது, ‘ஏன் எனக்காக தேவதாரு மரத்தில் ஒரு ஆலயத்தைக் கட்டவில்லை?’ என்று ஒரு வார்த்தை கேட்டிருப்பேனா? என்று சொல்.”’
-
-
1 ராஜாக்கள் 8:17-19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவின் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்று என் அப்பா தாவீது மனதார ஆசைப்பட்டார்.+ 18 ஆனால் யெகோவா என் அப்பா தாவீதிடம், ‘என் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்ட நீ மனதார ஆசைப்பட்டாய், அப்படி ஆசைப்பட்டது நல்லதுதான். 19 இருந்தாலும், ஆலயத்தை நீ கட்ட மாட்டாய். உனக்குப் பிறக்கப்போகிற உன் மகன்தான் என் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்டுவான்’+ என்று சொன்னார்.
-