-
எண்ணாகமம் 31:50பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
50 அதனால், நாங்கள் ஒவ்வொருவரும் கைப்பற்றிய தங்கச் சாமான்கள், கொலுசுகள், காப்புகள், முத்திரை மோதிரங்கள், தோடுகள், மற்ற நகைகள் எல்லாவற்றையும் யெகோவாவுக்குக் காணிக்கையாகத் தருகிறோம். யெகோவாவின் முன்னிலையில் எங்களுக்குப் பாவப் பரிகாரமாக இவற்றைத் தருகிறோம்” என்றார்கள்.
-
-
1 நாளாகமம் 18:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 உடனே, தாவீது ராஜாவிடம் நலம் விசாரிக்கவும் ஆதாதேசரைத் தோற்கடித்ததற்கு வாழ்த்துச் சொல்லவும் தோயூ தன்னுடைய மகன் ஹதோராமை அனுப்பினார். (ஏனென்றால், ஆதாதேசர் அடிக்கடி தோயூவை எதிர்த்துப் போர் செய்துவந்தான்) தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட பலவிதமான பொருள்களை தாவீதுக்கு ஹதோராம் கொடுத்தார். 11 தாவீது ராஜா இவற்றை யெகோவாவுக்கு அர்ப்பணித்தார்.*+ அதோடு, ஏதோமியர்கள், மோவாபியர்கள், அம்மோனியர்கள்,+ பெலிஸ்தியர்கள்,+ அமலேக்கியர்கள்+ ஆகிய எல்லா மக்களிடமிருந்தும் எடுத்துவந்த தங்கத்தையும் வெள்ளியையும்கூட அர்ப்பணித்தார்.
-