13 அவன்தான் என்னுடைய பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்டுவான்.+ அவனுடைய சிம்மாசனத்தை என்றென்றும் நிலைக்க வைப்பேன்.+ 14 நான் அவனுக்குத் தகப்பனாக இருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்.+ தவறு செய்யும்போது அவனைக் கண்டிப்பேன், மனிதர்கள் தண்டிப்பதுபோல் பிரம்பினால் தண்டிப்பேன்.+