-
சகரியா 6:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 பின்பு அவரிடம்,
‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது என்னவென்றால், “இதோ, தளிர் என்ற பெயருடைய ஒருவர் இருக்கிறார்.+ அவர் தன்னுடைய இடத்திலிருந்து துளிர்ப்பார். அவர் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவார்.+ 13 யெகோவாவின் ஆலயத்தைக் கட்டப்போவது அவர்தான், மேன்மை அடையப்போவதும் அவர்தான். அவர் தன்னுடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்துகொண்டு ராஜாவாகவும் குருவாகவும் சேவை செய்வார்.+ அந்த இரண்டு பொறுப்புகளையும் ஒருங்கிணைந்து* செய்வார்.
-