-
1 நாளாகமம் 22:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 உனக்கு ஒரு மகன் பிறப்பான்,+ அவன் சமாதானப் பிரியனாய் இருப்பான்; அதனால், அவனுக்கு சாலொமோன்*+ என்று பெயர் வைக்க வேண்டும். சுற்றியிருக்கிற எந்த எதிரியின் தொல்லையும் இல்லாமல் அவனை நிம்மதியாக வாழ வைப்பேன்;+ அவனுடைய ஆட்சிக்காலத்தில் இஸ்ரவேல் எங்கும் சமாதானமும் அமைதியும் இருக்கும்.+ 10 என் பெயருக்காக அவன்தான் ஆலயம் கட்டுவான்.+ அவன் எனக்கு மகனாக இருப்பான், நான் அவனுக்குத் தகப்பனாக இருப்பேன்.+ இஸ்ரவேலில் அவனுடைய ஆட்சியை என்றென்றும் நிலைக்க வைப்பேன்’+ என்று சொன்னார்.
-
-
2 நாளாகமம் 2:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 இப்போது என்னுடைய கடவுளான யெகோவாவின் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்டி, அவருக்கு அர்ப்பணிக்கப்போகிறேன்.* அவருடைய சன்னிதியில் நறுமண தூபப்பொருளை எரிப்பதற்காகவும்+ படையல் ரொட்டிகளை எப்போதும் வைப்பதற்காகவும்+ அதைக் கட்டப்போகிறேன்; காலையிலும் மாலையிலும்+ ஓய்வுநாட்களிலும்+ மாதப்பிறப்பு* நாட்களிலும்+ பண்டிகை நாட்களிலும்+ எங்கள் கடவுளான யெகோவாவுக்குத் தகன பலிகள் செலுத்துவதற்காக அதைக் கட்டப்போகிறேன். ஏனென்றால், இது இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிரந்தரக் கட்டளை.
-