-
1 நாளாகமம் 17:11-14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 நீ இறந்து உன் முன்னோர்களைப் போல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின்பு, உன் சந்ததியை, உன் மகன்களில் ஒருவனை,+ ராஜாவாக ஏற்படுத்துவேன். அவனுடைய ஆட்சியை உறுதியாக நிலைநாட்டுவேன்.+ 12 அவன்தான் எனக்காக ஒரு ஆலயத்தைக் கட்டுவான்.+ அவனுடைய சிம்மாசனத்தை என்றென்றும் நிலைக்க வைப்பேன்.+ 13 நான் அவனுக்குத் தகப்பனாக இருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்.+ உனக்கு முன்பு இருந்தவனுக்கு+ மாறாத அன்பு காட்டுவதை நிறுத்திக்கொண்டது போல அவனுக்குச் செய்ய மாட்டேன்.+ 14 அவனை என் சிம்மாசனத்தில் உட்கார வைத்து என்றென்றும் ஆட்சி செய்ய வைப்பேன்.+ அவனுடைய ஆட்சியையும் ராஜ வம்சத்தையும் என்றென்றும் நிலைக்கச் செய்வேன்”+ என்று சொல்’” என்றார்.
-