-
1 ராஜாக்கள் 8:25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவே, உங்களுடைய ஊழியரான என் அப்பா தாவீதிடம், ‘நீ என் வழியில் நடந்ததுபோல் உன் வாரிசுகளும் எனக்குக் கீழ்ப்படிந்து என் வழியில் நடந்தால், இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்ய உனக்கு வாரிசு இல்லாமல் போவதில்லை’+ என்று நீங்கள் கொடுத்திருந்த வாக்கை இப்போது நிறைவேற்றுங்கள்.
-
-
அப்போஸ்தலர் 2:30, 31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்ததாலும், கடவுள் அவரிடம், ‘உன்னுடைய சந்ததியில் வரும் ஒருவரை உன் சிம்மாசனத்தில் உட்கார வைப்பேன்’+ என்று ஆணையிட்டுக் கொடுத்ததை அறிந்திருந்ததாலும், 31 கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து முன்கூட்டியே தெரிந்து, கிறிஸ்து கல்லறையில்* விட்டுவிடப்பட மாட்டார் என்றும், அவருடைய உடல் அழிந்துபோகாது+ என்றும் சொல்லியிருந்தார்.
-
-
அப்போஸ்தலர் 13:22, 23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 பின்பு, அவரை நீக்கிவிட்டு தாவீதை ராஜாவாக நியமித்து,+ ‘ஈசாயின் மகன் தாவீது என் இதயத்துக்குப் பிடித்தமானவனாக இருப்பதைக் கண்டேன்;+ நான் விரும்பிய எல்லா காரியங்களையும் அவன் செய்வான்’ என்று அவரைப் பற்றிச் சாட்சி கொடுத்தார். 23 தான் கொடுத்த வாக்குறுதியின்படியே, தாவீதின் சந்ததியிலிருந்து இயேசுவை இஸ்ரவேலின் மீட்பராக+ வர வைத்தார்.
-