-
2 ராஜாக்கள் 21:7-9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 மனாசே தான் உண்டாக்கிய உருவச் சிலையை, அதாவது பூஜைக் கம்பத்தை,* கடவுளின் ஆலயத்தில் வைத்தார்;+ அந்த ஆலயத்தைப் பற்றித்தான் தாவீதிடமும் அவருடைய மகன் சாலொமோனிடமும் யெகோவா இப்படிச் சொல்லியிருந்தார்: “இஸ்ரவேலில் உள்ள எல்லா கோத்திரத்திலிருந்தும் நான் தேர்ந்தெடுத்த எருசலேமிலும், இந்த ஆலயத்திலும், என் பெயரை என்றென்றும் நிலைநாட்டுவேன்.+ 8 இஸ்ரவேலர்களுக்கு நான் கொடுத்த கட்டளைகள் எல்லாவற்றையும், அதாவது என்னுடைய ஊழியன் மோசே கொடுத்த திருச்சட்டம் முழுவதையும், அப்படியே அவர்கள் பின்பற்றி நடந்தால்+ அவர்களுடைய முன்னோர்களுக்கு நான் கொடுத்த தேசத்தைவிட்டு ஒருபோதும் அவர்களை அலைந்து திரிய விடமாட்டேன்.”+ 9 ஆனால், அவர்கள் கீழ்ப்படியவில்லை. இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா அழித்துப்போட்ட மற்ற தேசத்தார் செய்ததைவிட படுபயங்கரமான காரியங்களைச் செய்ய மனாசே அந்த மக்களைத் தூண்டிக்கொண்டே இருந்தார். இப்படி, கடவுளைவிட்டு அவர்கள் வழிவிலகிப் போகும்படி செய்தார்.+
-