7 சாலொமோன் ஜெபம் செய்து முடித்ததுமே,+ வானத்திலிருந்து நெருப்பு வந்து+ தகன பலியையும் மற்ற பலிகளையும் சுட்டெரித்தது. ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிறைந்தது.+ 2 யெகோவாவின் மகிமை யெகோவாவின் ஆலயத்தில் நிறைந்ததன் காரணமாக, குருமார்களால் யெகோவாவின் ஆலயத்துக்குள் நுழைய முடியவில்லை.+