உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 8:14-21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 பின்பு ராஜா திரும்பி, அங்கே நின்றுகொண்டிருந்த இஸ்ரவேல் சபையார் எல்லாரையும் பார்த்து அவர்களை ஆசீர்வதித்தார்.+ 15 அப்போது அவர், “இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவைப் புகழ்கிறேன். அவர் தன்னுடைய வாய் திறந்து என் அப்பா தாவீதுக்கு வாக்குக் கொடுத்து, அதைத் தன்னுடைய கையால் நிறைவேற்றியும் இருக்கிறார். 16 அவர் என் அப்பாவிடம், ‘என் மக்களான இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டுவந்தேன். அதுமுதல், என் பெயர் நிலைத்திருப்பதற்காக ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு இஸ்ரவேல் கோத்திரங்கள் நடுவே நான் எந்த நகரத்தையும் தேர்ந்தெடுக்கவில்லை.+ ஆனால், என்னுடைய மக்களான இஸ்ரவேலர்களுக்குத் தலைவனாக தாவீதைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்’ என்று சொல்லியிருந்தார். 17 இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவின் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்று என் அப்பா தாவீது மனதார ஆசைப்பட்டார்.+ 18 ஆனால் யெகோவா என் அப்பா தாவீதிடம், ‘என் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்ட நீ மனதார ஆசைப்பட்டாய், அப்படி ஆசைப்பட்டது நல்லதுதான். 19 இருந்தாலும், ஆலயத்தை நீ கட்ட மாட்டாய். உனக்குப் பிறக்கப்போகிற உன் மகன்தான் என் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்டுவான்’+ என்று சொன்னார். 20 கொடுத்த வாக்கை யெகோவா நிறைவேற்றிவிட்டார். யெகோவா வாக்குக் கொடுத்தபடியே, என் அப்பா தாவீதுக்குப் பிறகு இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் நான் ராஜாவாக உட்கார்ந்திருக்கிறேன். அதோடு, இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவின் பெயருக்காக ஒரு ஆலயத்தையும் கட்டி முடித்திருக்கிறேன்.+ 21 யெகோவா நம் முன்னோர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தபோது செய்திருந்த ஒப்பந்தம் அடங்கிய பெட்டியை வைப்பதற்காகவும்+ அங்கே ஒரு இடத்தைத் தயார் செய்திருக்கிறேன்” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்