28 ராஜா சொன்ன தீர்ப்பை இஸ்ரவேலர்கள் எல்லாரும் கேள்விப்பட்டார்கள். கடவுள் கொடுத்த ஞானத்தால்தான் அவர் நியாயம் வழங்குகிறார் என்பதைப் புரிந்துகொண்டார்கள்.+ அதனால், ராஜாவைப் பார்த்து பிரமித்துப்போனார்கள்.*+
34 சாலொமோனின் ஞானமான வார்த்தைகளைக் கேட்பதற்காக எல்லா தேசங்களிலும் இருந்து மக்கள் வந்தார்கள். அதோடு, உலகெங்கிலும் இருந்து ராஜாக்களும் அவருடைய ஞானத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்க வந்தார்கள்.+