15 ஆனால், இன்று நான் கொடுக்கிற கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கவனமாகக் கடைப்பிடிக்காமலும், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்காமலும் இருந்தால் இந்த எல்லா சாபங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+
48 யெகோவா உங்களுக்கு எதிராக விரோதிகளை அனுப்புவார். உங்களிடம் ஒன்றுமே இல்லாமல், பசியோடும்+ தாகத்தோடும் கிழிந்த துணிமணிகளோடும் அவர்களுக்கு வேலை செய்வீர்கள்.+ அவர் உங்களை அழிக்கும்வரை உங்கள் கழுத்தில் இரும்பு நுகத்தடியை* சுமத்துவார்.