-
2 ராஜாக்கள் 9:20, 21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 பின்பு அந்தக் காவல்காரன், “இரண்டாவதாகப் போனவனும் அவர்களைச் சந்தித்தான், ஆனால் திரும்பி வரவில்லை. ரதத்தை வெறித்தனமாக ஓட்டுவதைப் பார்த்தால் நிம்சியின் பேரன் யெகூ மாதிரி தெரிகிறது” என்று சொன்னான். 21 உடனே யோராம், “குதிரைகளை ரதத்தில் பூட்டுங்கள்!” என்று சொன்னார். போர் ரதத்தைக் கொண்டுவந்தவுடன் இஸ்ரவேலின் ராஜாவான யோராம் புறப்பட்டார். யூதாவின் ராஜாவான அகசியாவும்+ தன்னுடைய போர் ரதத்தில் புறப்பட்டுப் போனார். இரண்டு பேரும் யெகூவைப் பார்க்கப் போனார்கள். கடைசியில், யெஸ்ரயேலைச் சேர்ந்த நாபோத்தின் நிலத்தில்+ அவரைச் சந்தித்தார்கள்.
-