26 நம்பிக்கைக்குரிய நான்கு பேர் தலைமை வாயிற்காவலர்களாக இருந்தார்கள். உண்மைக் கடவுளின் வீட்டிலுள்ள சாப்பாட்டு அறைகளையும் பொக்கிஷ அறைகளையும் காவல்காக்கும் பொறுப்பு இந்த லேவியர்களுக்கு இருந்தது.+
13 அதனால், சிறியவர், பெரியவர் என்று எந்த வித்தியாசமும் பார்க்காமல், அவர்களுடைய தந்தைவழிக் குடும்பங்களின்படி குலுக்கல் போட்டார்கள்.+ எந்த வாசலை யார் காவல்காக்க வேண்டும் என்பதை இந்த முறையில் தேர்ந்தெடுத்தார்கள்.