உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 26
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

1 நாளாகமம் முக்கியக் குறிப்புகள்

      • வாயிற்காவலர்களின் பிரிவுகள் (1-19)

      • பொக்கிஷ அறைகளின் அதிகாரிகளும் மற்ற அதிகாரிகளும் (20-32)

1 நாளாகமம் 26:1

இணைவசனங்கள்

  • +1நா 9:2, 22; 2நா 23:16, 19
  • +1நா 26:14, 19

1 நாளாகமம் 26:9

இணைவசனங்கள்

  • +1நா 26:14, 19

1 நாளாகமம் 26:13

இணைவசனங்கள்

  • +நீதி 16:33

1 நாளாகமம் 26:15

இணைவசனங்கள்

  • +1நா 26:4, 5

1 நாளாகமம் 26:16

இணைவசனங்கள்

  • +1நா 26:10, 11

1 நாளாகமம் 26:17

இணைவசனங்கள்

  • +1நா 26:15

1 நாளாகமம் 26:18

இணைவசனங்கள்

  • +1நா 26:16

1 நாளாகமம் 26:20

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “பரிசுத்தமாக்கப்பட்ட.”

இணைவசனங்கள்

  • +1ரா 7:51; 14:25, 26; 1நா 9:26; 18:10, 11

1 நாளாகமம் 26:21

இணைவசனங்கள்

  • +1நா 29:8

1 நாளாகமம் 26:22

இணைவசனங்கள்

  • +1ரா 15:18

1 நாளாகமம் 26:23

இணைவசனங்கள்

  • +எண் 3:27

1 நாளாகமம் 26:25

இணைவசனங்கள்

  • +1நா 23:17
  • +யாத் 18:3, 4

1 நாளாகமம் 26:26

இணைவசனங்கள்

  • +1நா 29:3, 4
  • +1நா 29:6, 7
  • +எண் 31:50; 1நா 18:10, 11

1 நாளாகமம் 26:27

இணைவசனங்கள்

  • +யோசு 6:19
  • +எண் 31:28

1 நாளாகமம் 26:28

இணைவசனங்கள்

  • +1சா 9:9
  • +1சா 14:50
  • +2சா 2:18
  • +2சா 20:23

1 நாளாகமம் 26:29

இணைவசனங்கள்

  • +1நா 23:12
  • +உபா 17:9; 2நா 19:8

1 நாளாகமம் 26:30

இணைவசனங்கள்

  • +1நா 23:12

1 நாளாகமம் 26:31

இணைவசனங்கள்

  • +1நா 23:19
  • +1நா 29:26, 27
  • +யோசு 13:24, 25; 21:8, 39

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

1 நா. 26:11நா 9:2, 22; 2நா 23:16, 19
1 நா. 26:11நா 26:14, 19
1 நா. 26:91நா 26:14, 19
1 நா. 26:13நீதி 16:33
1 நா. 26:151நா 26:4, 5
1 நா. 26:161நா 26:10, 11
1 நா. 26:171நா 26:15
1 நா. 26:181நா 26:16
1 நா. 26:201ரா 7:51; 14:25, 26; 1நா 9:26; 18:10, 11
1 நா. 26:211நா 29:8
1 நா. 26:221ரா 15:18
1 நா. 26:23எண் 3:27
1 நா. 26:251நா 23:17
1 நா. 26:25யாத் 18:3, 4
1 நா. 26:261நா 29:3, 4
1 நா. 26:261நா 29:6, 7
1 நா. 26:26எண் 31:50; 1நா 18:10, 11
1 நா. 26:27யோசு 6:19
1 நா. 26:27எண் 31:28
1 நா. 26:281சா 9:9
1 நா. 26:281சா 14:50
1 நா. 26:282சா 2:18
1 நா. 26:282சா 20:23
1 நா. 26:291நா 23:12
1 நா. 26:29உபா 17:9; 2நா 19:8
1 நா. 26:301நா 23:12
1 நா. 26:311நா 23:19
1 நா. 26:311நா 29:26, 27
1 நா. 26:31யோசு 13:24, 25; 21:8, 39
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
1 நாளாகமம் 26:1-32

1 நாளாகமம்

26 இவையெல்லாம் வாயிற்காவலர்களின்+ பிரிவுகள்: கோராகியர்களில் மெசெலேமியா;+ இவர் கோரேயின் மகன். கோரே, ஆசாப்பின் மகன்களில் ஒருவர். 2 மெசெலேமியாவின் மகன்கள்: முதலாவது சகரியா, இரண்டாவது யெதியாயேல், மூன்றாவது செபதியா, நான்காவது யதனியேல், 3 ஐந்தாவது ஏலாம், ஆறாவது யெகோனான், ஏழாவது எலியோவெனாய். 4 ஓபேத்-ஏதோமின் மகன்கள்: முதலாவது செமாயா, இரண்டாவது யெகோஸபாத், மூன்றாவது யோவா, நான்காவது சாக்கார், ஐந்தாவது நெதனெயேல், 5 ஆறாவது அம்மியேல், ஏழாவது இசக்கார், எட்டாவது பெயுள்தாய்; இந்தப் பிள்ளைகளைத் தந்து ஓபேத்-ஏதோமை கடவுள் ஆசீர்வதித்திருந்தார்.

6 இவருடைய பேரன்கள், அதாவது செமாயாவின் மகன்கள், பலசாலிகளாகவும் திறமைசாலிகளாகவும் இருந்தார்கள். அதனால், இவர்கள் தங்களுடைய தந்தைவழிக் குடும்பத் தலைவர்களாக இருந்தார்கள். 7 செமாயாவின் மகன்கள்: ஒத்னி, ரெப்பாயேல், ஓபேத், எல்சபாத். எல்சபாத்தின் சகோதரர்களான எலிகூவும் செமகியாவும்கூட திறமைசாலிகளாக இருந்தார்கள். 8 இவர்கள் எல்லாரும் ஓபேத்-ஏதோமின் மகன்கள். இவர்களும் இவர்களுடைய மகன்களும் சகோதரர்களும் திறமைசாலிகளாக இருந்தார்கள், தங்களுடைய சேவையைச் செய்யத் தகுதியுள்ளவர்களாக இருந்தார்கள்; இவர்கள் மொத்தம் 62 பேர். 9 மெசெலேமியாவின்+ மகன்களும் சகோதரர்களும் மொத்தம் 18 பேர்; இவர்கள் திறமைசாலிகளாக இருந்தார்கள். 10 மெராரியின் வம்சத்தில் வந்த ஓசாவுக்கு மகன்கள் இருந்தார்கள். அவர்களுக்கு ஷிம்ரி தலைவராக இருந்தார். அவர் மூத்த மகனாக இல்லாவிட்டாலும், அவருடைய அப்பா அவரைத் தலைவராக நியமித்தார். 11 ஓசாவின் இரண்டாவது மகன் இல்க்கியா, மூன்றாவது மகன் தெபலியா, நான்காவது மகன் சகரியா; ஓசாவின் மகன்கள், சகோதரர்கள் என எல்லாரையும் சேர்த்து மொத்தம் 13 பேர்.

12 இந்த வாயிற்காவலர்களின் பிரிவில் இருந்த தலைவர்களுக்கு அவர்களுடைய சகோதரர்களைப் போலவே யெகோவாவின் வீட்டில் வேலைகள் இருந்தன. 13 அதனால், சிறியவர், பெரியவர் என்று எந்த வித்தியாசமும் பார்க்காமல், அவர்களுடைய தந்தைவழிக் குடும்பங்களின்படி குலுக்கல் போட்டார்கள்.+ எந்த வாசலை யார் காவல்காக்க வேண்டும் என்பதை இந்த முறையில் தேர்ந்தெடுத்தார்கள். 14 கிழக்கு வாசலுக்கான குலுக்கல் செலேமியாமின் பெயருக்கு விழுந்தது. விவேகமான ஆலோசகராகிய அவருடைய மகன் சகரியாவுக்குக் குலுக்கல் போட்டபோது, வடக்கு வாசல் அவருடைய பெயருக்கு விழுந்தது. 15 தெற்கு வாசல் ஓபேத்-ஏதோமின் பெயருக்கு விழுந்தது. சாமான் அறைகளைக் காவல்காக்க அவருடைய மகன்கள்+ நியமிக்கப்பட்டார்கள். 16 மேற்கு வாசல் சுப்பீம் மற்றும் ஓசாவின்+ பெயருக்கு விழுந்தது; இந்த வாசல் மேல்நோக்கிப் போகிற நெடுஞ்சாலையை ஒட்டியிருந்த ‘ஷல்லேகத் நுழைவாசலுக்கு’ பக்கத்தில் இருந்தது. இந்தக் காவலாளிகள் அருகருகே நின்று காவல் காத்தார்கள். 17 கிழக்கு வாசலை ஆறு லேவியர்கள் காவல் காத்தார்கள். வடக்கு வாசலைத் தினந்தோறும் நான்கு பேர் காவல் காத்தார்கள். தெற்கு வாசலைத் தினந்தோறும் நான்கு பேர் காவல் காத்தார்கள். சாமான் அறைகளை+ இரண்டு பேர் காவல் காத்தார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் இன்னும் இரண்டு பேர் காவலுக்கு நின்றார்கள். 18 மேற்கில் ஒரு மண்டபம் இருந்தது, நெடுஞ்சாலைக்குப் பக்கத்தில்+ நான்கு பேரும், மண்டபத்தை இரண்டு பேரும் காவல் காத்தார்கள். 19 கோராகியர்களிலிருந்தும் மெராரியர்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாயிற்காவலர்களின் பிரிவுகள் இவையே.

20 மற்ற லேவியர்களில் அகியா என்பவர் உண்மைக் கடவுளுடைய வீட்டிலுள்ள பொக்கிஷ அறைகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட* பொருள்கள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷ அறைகளுக்கும்+ அதிகாரியாக இருந்தார். 21 லாதானின் மகன்கள்: லாதானின் வம்சத்தில் வந்த கெர்சோனியர்களின் மகன்களில், அதாவது கெர்சோனியரான லாதான் வம்சத்தில் வந்த தந்தைவழிக் குடும்பத் தலைவர்களில், ஒருவரான யெகியேலி;+ 22 யெகியேலியின் மகன்களான சேத்தாம், சேத்தாமின் சகோதரன் யோவேல். இவர்கள் யெகோவாவின் வீட்டிலுள்ள பொக்கிஷ அறைகளுக்கு+ அதிகாரிகளாக இருந்தார்கள். 23 அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல்+ ஆகியோருடைய வம்சத்திலிருந்து செபுவேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்; 24 இவர் மோசேயின் மகனான கெர்சோமின் வம்சத்தில் வந்தவர். சாமான் அறைகளை மேற்பார்வை செய்யும் அதிகாரியாக இருந்தார். 25 இவருடைய சகோதரர்களான ரெகபியா,+ யெசாயா, யொராம், சிக்ரி, செலெமோத் ஆகியோர் எலியேசரின்+ வம்சத்தைச் சேர்ந்தவர்கள். 26 கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷ அறைகள் எல்லாவற்றுக்கும் செலெமோத்தும் அவருடைய சகோதரர்களும் அதிகாரிகளாக இருந்தார்கள். தாவீது ராஜா,+ தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள்,+ ஆயிரம் வீரர்களுக்குத் தலைவர்கள், நூறு வீரர்களுக்குத் தலைவர்கள், படைப்பிரிவுத் தலைவர்கள் ஆகியோர் இந்தப் பொருள்களைக் கடவுளுக்கு அர்ப்பணித்திருந்தார்கள்.+ 27 போர்களில்+ கைப்பற்றப்பட்ட பொருள்களின்+ ஒரு பகுதியை யெகோவாவின் வீட்டைப் பராமரிப்பதற்காக அர்ப்பணித்திருந்தார்கள். 28 அதோடு, இறைவாக்கு சொல்பவரான+ சாமுவேல், கீசின் மகன் சவுல், நேரின் மகன் அப்னேர்,+ செருயாவின் மகன்+ யோவாப்+ ஆகியோரும்கூட கடவுளுக்காகப் பொருள்களை அர்ப்பணித்திருந்தார்கள். கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட எல்லா பொருள்களையும் செலோமித்தும் அவருடைய சகோதரர்களும் காவல் காத்தார்கள்.

29 இத்சேயார்+ வம்சத்தில் வந்த கெனானியாவுக்கும் அவருடைய மகன்களுக்கும் கடவுளுடைய வீட்டுடன் சம்பந்தப்படாத மற்ற நிர்வாகப் பணிகள் கொடுக்கப்பட்டன. அவர்கள் இஸ்ரவேல் மக்களுக்கு அதிகாரிகளாகவும் நீதிபதிகளாகவும்+ இருந்தார்கள்.

30 எப்ரோன்+ வம்சத்தில் வந்தவர்களில் அஷபியாவும் அவருடைய சகோதரர்களுமாகிய 1,700 பேர் திறமைசாலிகளாக இருந்தார்கள். இஸ்ரவேல் தேசத்தில், யோர்தானுக்கு மேற்கே உள்ள பகுதிகளை நிர்வகிக்கும் பொறுப்பு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது; அங்கே யெகோவாவுக்கு எல்லாவித வேலைகளையும் செய்துவந்தார்கள், ராஜாவுக்குச் சேவையும் செய்துவந்தார்கள். 31 எப்ரோன் வம்சத்தில் வந்த தந்தைவழிக் குடும்பங்களுக்கு, எறியா+ தலைவராக இருந்தார். தாவீது தன்னுடைய ஆட்சிக் காலத்தின் 40-ஆம் வருஷத்தில்,+ எப்ரோனியர்களில் பலசாலிகளாகவும் திறமைசாலிகளாகவும் இருந்த ஆட்களைத் தேடிக் கண்டுபிடித்தார்; இவர்கள் கீலேயாத்திலுள்ள யாசேரில்+ இருந்தார்கள். 32 எறியாவின் சகோதரர்கள் 2,700 பேர்; இவர்கள் திறமைசாலிகளாகவும் தங்களுடைய தந்தைவழிக் குடும்பங்களுக்குத் தலைவர்களாகவும் இருந்தார்கள். இவர்களை ரூபன் கோத்திரம், காத் கோத்திரம், மனாசேயின் பாதிக் கோத்திரம் ஆகியவற்றுக்கு அதிகாரிகளாக தாவீது ராஜா நியமித்தார்; இவர்கள் அங்கே உண்மைக் கடவுள் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும், ராஜா சம்பந்தப்பட்ட விஷயங்களையும் கவனித்துக்கொண்டார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்