-
1 நாளாகமம் 12:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 கீசின் மகனான சவுலுக்குப் பயந்து+ சிக்லாகுவில்+ தாவீது ஒளிந்துகொண்டிருந்தபோது அவருடன் சேர்ந்துகொண்ட ஆட்களைப் பற்றிய தகவல். போரில் அவருக்கு உதவி செய்த மாவீரர்களுடன் இந்த ஆட்கள் சேர்ந்துகொண்டார்கள்.+ 2 இவர்கள் வில்வீரர்கள்; வலது கையாலும் இடது கையாலும்+ திறமையாகக் கவண்கல் எறிகிறவர்கள்,+ அம்பு எறிகிறவர்கள். இவர்கள் பென்யமீன்+ கோத்திரத்தைச் சேர்ந்த சவுலின் சகோதரர்கள்.*
-