-
1 ராஜாக்கள் 7:23-26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 பின்பு, ‘செம்புக் கடல்’ என்றழைக்கப்பட்ட பெரிய தண்ணீர்த் தொட்டியை உலோகத்தால் அவர் வார்த்தார்.+ அது வட்ட வடிவில் இருந்தது. அந்தத் தொட்டியின் ஒரு விளிம்புமுதல் மறு விளிம்புவரை அதன் விட்டம் 10 முழம், அதன் உயரம் 5 முழம், அளவுநூலால் அளந்தபோது அதன் சுற்றளவு 30 முழமாக இருந்தது.+ 24 அதன் வாய்ப்பகுதியின் கீழே சுற்றிலும் குமிழ் வடிவத்தில் வேலைப்பாடுகள் இருந்தன.+ ஒரு முழத்துக்குப் பத்துக் குமிழ்கள் எனத் தொட்டியைச் சுற்றிலும் இருந்தன. அவை இரண்டு வரிசையாக செம்புத் தொட்டியோடு சேர்த்து வார்க்கப்பட்டிருந்தன. 25 அந்தத் தொட்டி 12 காளை உருவங்களுக்கு மேலே வைக்கப்பட்டிருந்தது.+ 3 காளைகள் வடக்கேயும் 3 காளைகள் மேற்கேயும் 3 காளைகள் தெற்கேயும் 3 காளைகள் கிழக்கேயும் பார்த்தவாறு நின்றன. அந்தக் காளைகள்மேல் தொட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்தக் காளைகளின் பின்புறங்கள் தொட்டியின் மையப்பகுதியை நோக்கி இருந்தன. 26 அந்தத் தொட்டியின் தடிமன் ஒரு கையளவு.* அதன் விளிம்பு கிண்ணத்தின் விளிம்பைப் போல் இருந்தது. பார்ப்பதற்கு மலர்ந்த லில்லிப் பூவைப் போல் இருந்தது. அந்தத் தொட்டியில் சுமார் 44,000 லிட்டர்* தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்டது.
-