-
எண்ணாகமம் 8:19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 லேவியர்களை இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து பிரித்தெடுத்து, ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் அன்பளிப்பாகக் கொடுப்பேன். லேவியர்கள் இஸ்ரவேலர்களின் சார்பாகச் சந்திப்புக் கூடாரத்தின் வேலைகளைச் செய்து,+ அவர்களுக்காகப் பாவப் பரிகாரம் செய்வார்கள். இஸ்ரவேலர்கள் பரிசுத்த இடத்துக்குப் பக்கத்தில் வந்து தண்டிக்கப்படாமல் இருப்பதற்காகத்தான் இந்த ஏற்பாட்டைச் செய்கிறேன்”+ என்றார்.
-
-
2 நாளாகமம் 35:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 பண்டிகைக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ராஜா கட்டளையிட்டபடி குருமார்கள் அவரவருடைய இடங்களில் நின்றார்கள்; லேவியர்கள் அவரவருடைய பிரிவுகளின்படி நின்றார்கள்.+ 11 பின்பு, பஸ்கா ஆட்டுக்குட்டிகளை அவர்கள் வெட்டினார்கள்.+ லேவியர்களிடமிருந்து இரத்தத்தை வாங்கி குருமார்கள் தெளித்தார்கள்,+ அந்தச் சமயத்தில் ஆடுகளின் தோலை லேவியர்கள் உரித்துக்கொண்டிருந்தார்கள்.+
-